Monday, 29 October 2012

தொடர் தாக்குதலில் பத்திரிகைகள்













          தே மு தி க கட்சி தலைவர் விஜயகாந்த் சென்னையில் பத்திரிகையாளரை தாக்கியது குறித்து கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் தொடர் தாக்குதலில் பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கபடுவது நம் நாட்டில் தொடர் கதையாகிறது . விஜயகாந்த் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக  சபை நிகழ்வுகளில் தொடர்ந்து பணியாற்றுவதில் மெத்தன போக்குடன் செயல்படுகிறார் சபைநிகழ்வுகளில் பங்கேற்க மறுக்கிறார் என குற்றம் சாட்டபடுகிறார் .விஜயகாந்த் சபையில் நீக்கப்பட்ட அன்று நடந்த சபையில் நடந்த நிகழ்ச்சிகள் மக்கள் மன்றத்தில் முழுமையாக சென்று அடையவில்லை . பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் தாக்கப்பட்டது (அ)இழிவுபடுத்தபட்டது  விமான நிலையத்திலா  அல்லது சட்டமன்றத்திலா??????????

         நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் சட்டசபையில் சில உறுப்பினர்கள் ஆபாச திரைப்படம் பார்த்து கொண்டிருந்தது மக்கள் கவனத்திற்க்கு எடுத்து சென்ற தொலைக்காட்சிகளால் தமிழக சட்டசபையின்  நிகழ்வுகளை மக்கள் மன்றத்துக்கு எடுத்து செல்லமுடியுமா ?????


          சட்டமன்ற பொன்விழா கொண்டாட உள்ள இந்த தருணத்தில் சபையில் அனைத்து பத்திரிகையாளர்களையும்  அனுமதிப்பதற்கும் பத்திரிகை சுதந்திரம் காக்கபடுவதற்கும் பத்திரிகையாளர்கள் போராட முடியுமா ?????

No comments:

Post a Comment