எப்பவும் போல தான் போச்சு புயல பாக்கறதுக்கு முன்னாடி நாள்.....
(வழக்கமான நியூஸ் , வானிலை அறிக்கை எல்லாமே) .
ஆனா வழக்கமா சொல்லற மாதிரி புயல் ஆந்திரால நெல்லூர்க்கும் தமிழ்நாடுல இருக்கும் நடுவுல கடக்குமுன்னு சொல்லாம
புயல் கடலூர்க்கும் சென்னைக்கும் நடுவுல கடக்கும்ன்னு நியூஸ்ல போட்டாங்க ... "எப்போவுமே வர புயல தானேன்னு , "தானே புயல" சாதாரணமா தான் நினைச்சோம்"...
புயல்ன்னு சொல்லுவாங்க ரெண்டு நாளைக்கு மழை பெய்யும்ன்னு தான் நினைச்சோம்...
அப்படி நான் நினைச்ச எல்லாத்தையுமே 6 மணி நேரத்துல அடிச்சி பாழாக்கிடுச்சு
பணக்காரன்,ஏழை எவனையும் பார்க்கல அந்த புயல்
காலையில எழுந்து பார்த்தா மயான அமைதி ,ஊரே சுடுகாடு மாதிரி இருந்துச்சு(எல்லா மரமும் விழுந்து செத்து போச்சே அப்பறம் சுடுகாடு தான )
ராத்திரி பணக்காரனா படுத்தவன் காலைல கடன்காரனா,பிச்சகாரனா அகிடானுங்க (பல வருஷமா வாழ்க்கை கொடுத்த பலா ,முந்திரி எல்லாம் போச்சே )..கம்பெனி வச்சிருக்கவன் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுவான் ... விவசாயி என்ன பண்ணுவான் பாவம்..

ஒரு 15 நாள் கரண்ட் இல்லாம,தண்ணி இல்லாம அனுபவிச்ச அந்த நாட்கள யாருமே மறக்கமாட்டாங்க ..
தண்ணிக்கு கியூ நின்னுச்சு 25ருபாய் விக்குற தண்ணி 100ரூபாய்க்கு வித்துசே..
நடுத்தர குடும்பத்த சேர்ந்த எனக்கே அவ்ளோ பாதிப்பு... அப்போ ஏழைகளுக்கு ????
பாதிப்பே இல்லன்னு யாருமே சொல்ல முடியாத அளவுக்கு எங்கள மிரட்டிய அந்த புயல இன்னும் மறக்க முடியாமா இருக்கும் போது அதுக்குள்ள இன்னொரு புயலா ??????????
தண்ணிக்கு கியூ நின்னுச்சு 25ருபாய் விக்குற தண்ணி 100ரூபாய்க்கு வித்துசே..
பாதிப்பே இல்லன்னு யாருமே சொல்ல முடியாத அளவுக்கு எங்கள மிரட்டிய அந்த புயல இன்னும் மறக்க முடியாமா இருக்கும் போது அதுக்குள்ள இன்னொரு புயலா ??????????
காற்றழுத்தம் தானே புயலாச்சு,
கடலெல்லாம் தானே அலையாச்சு,
கரையையும் தானே கடந்தாச்சு,
கடலூரும் தானே பாழாச்சு.
வீடுகள் வெள்ளத்தின் காடாச்சு,
விவசாயம் நீரோடு போயாச்சு,
மின்சாரம் இல்லாம இருளாச்சு,
மீன்கூட பிடிக்காத நிலையாச்சு.
இருக்கின்ற துன்பங்கள் போதாதா?
இனிமையாய் நாம்வாழக் கூடாதா?
நடக்கின்ற வழியெல்லாம் தண்ணீரா?
நம்மக்கள் சிந்திவிட்ட கண்ணீரா?
தானேபுயல் வந்ததால் தானே,
தமிழ்மக்கள் உள்ளங்கள் வீணே,
நொந்து தினம் வாடிடுது தானே,
நோவு வந்து சாகாதோ? தானே.